முப்படையினருக்காக விமான நிலையத்தில் நிதி சேகரிப்பு

230

i3

முன்னொரு காலத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை சமர்க்களத்தில் எதிர்கொண்ட முப்படையினரும் பல்வேறு பதில் தாக்குதல்களை மேற்கொண்டு பல்லாயிரத்திற்கு அதிகமான இராணுவத்தினரை இழந்துள்ளனர்.மேலும் பலர் அங்கவீனமடைந்துள்ளனர்.

இந்நிலையில் முப்படையினருக்கும் வீடுகள் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிதி சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முப்படையினருக்கும் வீட்டுத்திட்டத்தின் செயற்பாட்டின் கீழ் கண்டி, குருநாகல், மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, பதுளை, காலி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, களுத்துரை, கேகாலை, பொலன்னருவை, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தளை, நுவரெலியா மற்றும் கொழும்பு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முப்படை வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE