
அடுத்த ஆண்டு உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மட்டுமன்றி சில மாகாண சபைகளின் தேர்தல்களும் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஆண்டு ஆரம்பத்தில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு, சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைவதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கே நன்மை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.