பிரதமர் மோடிக்கு சேவாக் விடுத்த உருக்கமான வேண்டுகோள்!

251

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)

ரியோ ஒலிம்பிக்கில்அசத்திய தீபா கர்மர் மற்றும் லலிதா பாபர் ஆகியவர்களின் திறமையை வளர்க்க பிரதமர் நரேந்திரமோடி உதவ முன்வரவேண்டும் என சேவாக்கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் பல கருத்துக்கள் மற்றும் பிரபலங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்.

அது போல தற்போது அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கும் கருத்து இந்தியாவில் உள்ள அனைத்துவிளையாட்டு வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது.

ஒலிம்பிக் வரலாற்றில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் இந்திய சார்பில் இறுதிபோட்டிக்கு நுழைந்து நூலிழையில் பதக்கத்தைதவறவிட்டார் தீபா கர்மாகர்.

தீபா கர்மாகருக்கு தான் சளைத்தவள் அல்ல என பெண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப்பந்தைய போட்டியில் பந்தைய தூரத்தை 9.22 நிமிடங்களில்கடந்து 10 வது இடத்தை பிடித்தார் Lalita Babar.

இவர்களின் திறமையை கண்டு அசந்துபோன சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் இவர்கள் இருவரும் தம் நாட்டிற்கு கிடைத்த பெரியபொக்கிஷங்கள். பதக்கங்கள் வெல்லவில்லை என்றாலும், அவர்கள் செய்த முயற்சிகள் பெரிதும்பாரட்டக்கூடியவை. எனவே இவர்களின் திறமையை வளர்க்க பிரதமர் நரேந்திரமோடி முன்வரவேண்டும், என தெரிவித்துள்ளார்.

மேலும் இரு பெண்கள் இப்போட்டிகளில் சாதித்திருப்பது, இந்தியாவில் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இவ்வகையான போட்டிகளில் ஊக்குவிப்பதற்கு ஒரு தூண்டுகோலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE