முறுங்கைக்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

345

முறுங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன.

இதனுடைய காய், இலை, பூ ஆகியவற்றை நம் அன்றாட உணவில் தினமும் சமைத்து சாப்பிடுவதால் பின்வரும் மருத்துவ பலன்களை நாம் பெற முடியும்.

முறுங்கைக்காய்

முறுங்கைக்காயில் கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து மற்றும் விட்டமின்கள் A, C போன்ற சத்துகள் உள்ளது.எனவே இதை தினமும் சமைத்து சாப்பிடும் போது ஏராளமான நோய்கள் குணமடைகின்றன.

  • மலச்சிக்கலை போக்குகிறது.
  • வயிற்றுப் புண்ணை குணப்படுத்துகிறது.
  • மூலநோய்க்கு சிறந்த மருந்தாக முறுங்கைக் காய் உள்ளது.
  • தொண்டை கரகரப்பு, சளி மற்றும் தொண்டை புண் ஆகியவற்றை சரிசெய்வதில் முக்கிய பங்கை வகுக்கிறது.
  • ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணையங்களின் வீக்கம், ஆகியவற்றை போக்க வல்லது.
  • வயிற்றுப் புழுக்கள் மற்றும் காய்ச்சல்களுக்கு எதிராக இந்த முறுங்கைக் காய் செயல்படுகிறது.
முறுங்கைக் கீரை

முறுங்கை கீரையில் புரதம், கொழுப்பு, தாதுக்கள்,விட்டமின்கள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இந்த முறுங்கைக் கீரையை சமைத்து சாப்பிட்டால் நிறைய மருத்துவ பலனை நாம் பெறலாம்.

  • இக்கீரையில் வைட்டமின் சி மிகுந்திருப்பதால் சொறி சிரங்கு முதலிய நோய்கள் நீங்கும்.
  • பித்த மயக்கம் கண் நோய் சொரிய மாந்தம் முதலியவை நீங்கும்.
  • இக்கீரையில் வைட்டமின் ஏ மிகுந்திருப்பதால் கண்னுக்கு ஒளிஊட்டகூடியது.
  • தொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது .
  • மலசிக்கலை தடுக்கிறது .
  • இக்கீரையில் சுண்ணாம்பு சத்துக்களும் , இரும்புசத்துகளும் அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது .
  • முருங்கை கீரை சிறுநீரைப் பெருக்கை ஏற்படுத்துகிறது.
  • ஆண்களுக்கு ஆண்மை அதிகரித்து இல்லற வாழ்க்கையை இன்பமாக்குகிறது.
  • பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு, பால் அதிகமாக சுரக்கும் தன்மையை தருகிறது.
முறுங்கைப் பூ

முறுங்கைக் கீரையில் முறுங்கைப் பூவிலும் அதன் கீரையில் உள்ள சத்துகள் அனைத்தும் உள்ளதால் இவை பலவகையான மருத்தவ குண்ங்களில் சிறந்து காணப்படுகிறது.

  • உடலின் உள்ள அதிகபடியான சூட்டைத் தணிக்கிறது.
  • விந்து விருத்தி அடைந்து ஆண்மையை அதிகப்படுத்துகிறது.
  • உடம்பில் உண்டாகும் வீக்கங்கள் மற்றும் காயங்களுக்கு உகந்ததாக உள்ளது.
  • கண்வலி மற்றும் வயிற்று வலியை குணப்படுத்துகிறது.
  • ஞாபக சக்தியைத் தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது.
  • பித்தத்தை குறைத்து,நரம்பு தளர்ச்சியை நீங்கச் செய்கிறது.
  • நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்துகிறது.
SHARE