அதிரடி முடிவால் தங்கம் வென்ற வீராங்கனை 

290

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பஹாமாஸைச் சேர்ந்த மில்லர் மகளிர் 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இந்தப் போட்டியில் அவர் வென்ற விதம் அனைவரையும் வாய் பிளக்க வைத்துவிட்டது.

ரியோ ஒலிம்பிக் தொடரில் மகளிர் 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப்போட்டியில் இதில் அமெரிக்காவைச் சேர்ந்த அலிசன் ஃபெலிக்ஸ் இறுதியில் வெற்றி பெறுகிற நிலையில் இருந்தார். ஆனால் பஹாமாஸைச் சேர்ந்த ஷானே மில்லர் அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.

அமெரிக்க வீராங்கனை அலிசன் எல்லை கோட்டை நெருங்கிய தருணத்தில் மில்லர் திடீரென ஒரு அதிரடி முடிவை எடுத்தார்.

நீச்சல் போட்டியில் வீரர்கள் தண்ணீரில் குதிப்பது போல் அவர் தரையில் குதித்து எல்லை கோட்டை பாய்ந்து சென்று தொட்டார். இந்தச் செயலால் அவர் முதலிடத்தைப் பிடிக்க முடிந்தது.

49.44 விநாடிகளில் அவர் இலக்கை அடைந்து தங்கம் வென்றார். மில்லரின் இந்த எதிர்பாராத செயலால் அலிசன் ஃபெலிக்ஸால் இரண்டாம் இடமே (49.51) பிடித்தார்.

ஷானே மில்லரின் அதிரடி செயலால் பஹாமாஸ் முதல் பதக்கத்தை வென்றது. அதுவும் தங்கமாக அமைந்துவிட்டது.

SHARE