போரை யார் முடிவுக்கு கொண்டு வந்தார்கள் என்பதனை மக்கள் அறிவார்கள்! மஹிந்த ராஜபக்ச

248

President-Mahinda-Rajapaksa

யார் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள் என்பதனை மக்கள் நன்கு அறிவார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பார்வையிட்டு திரும்பிய போது அவர் ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

வடக்கின் போரை முடிவுறுத்தியதில் தமக்கும் பங்கு உண்டு என சிலர் கூறுகின்றார்கள். இவ்வாறான கூற்றுக்களை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு மக்கள் முட்டாள்கள் இல்லை.

வடக்கில் எப்போது போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என்பதனை மக்கள் அறிவார்கள்.

போர் முடிவுறுத்தப்பட்டமை குறித்து பல்வேறு நபர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட முடியும். எனினும் மக்கள் எல்லாவற்றையும் புரிந்து கொண்டுள்ளனர்.

எனது மகன் சிறைச்சாலையில் நன்றாக இருக்கின்றார். அது பற்றி பேசுவதற்கு இனி ஒன்றுமில்லை என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

SHARE