மலேசியாவில் இருந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் இந்தோனேஷியா கடற்பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக மலேசியாவின் கடல்வழி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கப்பல் 9 இலட்சம் லீற்றர் பெறுமதியான எண்ணெயை எற்றிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் தற்போது இந்தோனேஷியா பகுதியில் இருக்கலாம் என தான் நம்புவதாக மலேசியாவின் கடலோர பணியகத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடத்தல்காரர்கள் தொடர்பில் எந்த தகவலும் இது வரையில் கண்டறியப்பட வில்லை என அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.