12 வருடங்களுக்கு பிறகு சிக்கிக்கொண்ட இலங்கை அகதி!

201

Evening-Tamil-News-Paper_7254755497

சர்வதேச போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட இலங்கை பிரஜை ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து 12.8 கோடி பெறுமதியான ஹரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற போதை பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இவர் படகு மூலம் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் போதை பொருள் கடத்தலில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

சரவண குமார் என்று அழைக்கப்படும் 38 வயதுடைய இவர் இராமநாதபுரம் முகாமில் தங்கியிருந்த இலங்கை அகதி எனவும் விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

பின்னர் இவர் இலங்கைக்கு தப்பி வந்து பொய்யான கடவுச் சீட்டு ஒன்றை தயார் செய்து முத்து மகேஸ்வரன் என தன் பெயரை மாற்றிக் கொண்டு 2008 அம் ஆண்டு சுவீ்டனுக்கு சென்றுள்ளதாகவும் பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இவர் தற்போது சுவீடன் குடியுரிமை பெற்றுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

SHARE