நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் பகிரங்கமாக கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சுவாதி இள வயதிலேயே தனது உயிரை இழந்ததால், அதுவும் கொடூரமாக இழந்துள்ளதால் அவரது ஆவி அப்பகுதியில் அலைவதாக பலர் அச்சம் தெரிவித்திருக்கிருக்கின்றனர்.
மேலும், நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் குடியிருப்பவர்களும் இதுகுறித்து சில கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர். அதேபோல நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்த வட மாநில வாலிபரும் அதிர்ச்சியில் உறைந்து போகும் அளவில் எதையோ பார்த்ததாக கூறியதால் மேலும் இந்த தகவல் பரபரப்பாகியது.
இந்த நிலையில், ஆராய்ச்சி மனப்பான்மை உள்ள ஒரு வாலிபருக்கு இதை சோதித்துப்பாரக்கும் விபரீத எண்ணம் ஏற்பட்டது. அதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டு நள்ளிரவில் நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்துக்கு தனியாகச் சென்றார். தூரத்தே செல்லும்போது இரவுப்பணியில் இருந்த ஸ்டேஷன் மாஸ்டர் இருப்பது லைட் வெளிச்சத்தில் கனவுபோல தெரிந்தது.
கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நடந்தார். இரவு குளிர் அடிக்கும் என்பதால் கருப்பு நிற ஜர்க்கின் அணிந்து கொண்டு சென்றார். அப்போது தூரத்தே இருந்த நாய் ஒன்று இருட்டுக்குள்ளிருந்து அவரைப் பார்த்து நாய் குரைத்தது. அதில் அதிர்ச்சியடைந்த அவர் ஜர்க்கினை கழட்டி கையில் வைத்துக்கொண்டார். ஆனாலும் நாய் குரைப்பதை நிறுத்தவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தார்.. யாரும் இல்லை. பின் ஏன் நாய் குரைக்கிறது என்ற ஆராய்ச்சி மனம் தேடியது.
ரயில் நிலையத்தின் பயணிகள் உட்காரும் பெஞ்சில் ஒரு பிச்சைக்காரி உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அதனால், தான் நாய் குரைத்திருக்கிறது என்று தனக்குத்தானே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மேலும் நடந்தார்.
பெஞ்ச் அருகே போன போது பிச்சைக்காரியை காணவில்லை. அதிர்ந்த ஆராய்ச்சி மனசு.. சுற்றிலும் தேடினார். யாரையும் காணோம். குளிரிலும் அவருக்கு வியர்த்தது. வேகமாக வந்த திசையிலேயே திரும்பி நடக்க ஆரம்பித்தார்.
எதிரில் அந்த பிச்சைக்காரி தலையை சொரிந்து கொண்டே பல்லிளித்து சிரித்தார்.. அங்கே பார்த்த பிச்சைக்காரி எப்படி இங்கே..? அவ்வளவு தான். பிடித்தார் ஓட்டம்…மூச்சு வாங்க ஓடினார். தலை தெறிக்க ஓடினார்.