முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு கோரிக்கை!

238

625.117.560.350.160.300.053.800.210.160.90

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் கடந்த கால சூழ்நிலையினால் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

எனவே, தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நல்ல உள்ளம் கொண்டவர்களிடம் இருந்து அவர்கள் ஆதரவினை எதிர்பார்த்து நிற்கின்றனர்.

முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நடக்கமுடியாத நிலையில் சக்கர நாற்காலியில் இருக்கும் தாம் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக கூறியுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் உள்ளவர்களுக்கு சமூக அமைப்புகள் ஓரளவு உதவி வருகின்றபோதிலும், கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்களுக்கு உதவிகள் கிடைப்பதில்லையென அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

SHARE