கிளிநொச்சி நகரப் பொதுச் சந்தைக்கான புதிய கட்டிடங்கள் அமைக்கப்படும்! சிறீதரன் எம்.பி

219

கிளிநொச்சி நகரப் பொதுச் சந்தை வர்த்தகர்களின் கோரிக்கைகளுக்கமைவாக புதிய சந்தைக் கட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகர் பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், உங்களது கோரிக்கைகளுக்கமைவாக வடமாகாண சபையின் முயற்சியாலும் நீங்கள் நாங்கள் எல்லோரும் சேர்ந்தெடுத்த முயற்சிகளின் பலனாக எமது சந்தைக்கான புதிய கட்டிங்கள் அமைக்கப்படவுள்ளன.

 

கடந்த காலங்களில் எழுத்துக் கணக்கின்றி அபிவிருத்தி என்ற போர்வையில் அடாவடிகளில் ஈடுபட்ட மோசடிக்காரர்கள் பலர் இப்போது தாம் மக்களுக்காக அதைச் செய்கிறோம் இதைச் செய்கிறோம் என்று கூறித் திரிகின்றார்கள்.

கடந்த காலத்தில் ஆட்சியின் பங்காளிகளாக இருந்தவர்கள் இச்சந்தையில் சரியான திட்டமிடல்கள் அற்ற முறையில் கட்டிடங்களை அமைக்கவும், மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கவும் என செயற்பட்டுள்ளார்கள்.

பல இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாகக் காணக்குக் காட்டப்பட்டுள்ள போதிலும் அதற்கான வேலைகள் நடைபெறவில்லை. அதற்கான கணக்குக்கள்கூட பேணப்படவில்லை.

இனிவரும் காலங்களிலாவது எமது பகுதிக்கான அபிவிருத்திகள் மக்களது விருப்புக்களுடன் சீரான முறையில் முன்னெடுக்கப்படவேண்டும் என நாம் விரும்புகின்றோம்.

உங்கள் கோரிக்கைப்படி எமது எல்லோரதும் முயற்சியால் கிளிநொச்சி நகரச் சந்தைக்கான புதிய கட்டிடங்கள் வர்த்தகர்கள் விரும்பிய முறையில் சீராக அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (4) - Copy 625.0.560.320.160.600.053.800.668.160.90 (6) - Copy 625.0.560.320.160.600.053.800.668.160.90 (7) - Copy

SHARE