கந்தையா அருந்தவபாலன்அவர்களின் மணிவிழா 17.08.2016 புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு சாவகச்சேரிசிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள தென்மராட்சி கலைமன்ற மண்டபத்தில்சிறப்புற இடம்பெற்றது.

263

கடந்த வருடத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்போட்டியிட்டு 40,000 க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவரும், சாவகச்சேரிடிறிபேர்க் கல்லூரியில் நீண்டகாலம் அதிபராக சேவையாற்றிய கந்தையா அருந்தவபாலன்அவர்களின் மணிவிழா 17.08.2016 புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு சாவகச்சேரிசிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள தென்மராட்சி கலைமன்ற மண்டபத்தில்சிறப்புற இடம்பெற்றது.

மருதங்கேணி பிரதேச செயலரும் மணிவிழாக் குழுவின் தலைவருமாகிய க. கனகேஸ்வரன்தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு விழாநாயகரை வாழ்த்தினர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

நிகழ்வில் வண. ஜாக்கிரத் சைதன்யா, சிவஸ்ரீ க. கிருபானந்தக்குருக்கள், வண.தே.நு.ஜெயநேசன் ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர்.

எதிர்க்கட்சித் தலைவரும்தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை. சோ. சேனாதிராசா, வடமாகாணமுதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்வசந்தி அரசரட்ணம், முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் வி.பி. சிவநாதன்,தென்மராட்சி பிரதேச செயலர் அஞ்சலாதேவி சாந்தசீலன், டிறிபேர்க் கல்லூரியின்முன்னாள் அதிபர் மு.நாகேந்திரராஜா, ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

கலாநிதி செ. சேதுராஜா, யாழ். பல்கலைக்கழக பொருளியல் துறை தலைவர் சு.சி.உதயகுமார், சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி அதிபர் ந.ஜெயக்குமாரன், சாவகச்சேரிஇந்துக் கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன், சாவகச்சேரி கைத்தொழில் வணிக மன்றத்தலைவர் வ.ஸ்ரீபிரகாஸ் ஆகியோர் பாராட்டுரைகளை வழங்கினர்.

நிகழ்வில் அருந்தவம் என்ற மணிவிழா மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதனைதொழிலதிபர் வை.சிவராசா வெளியிட்டு வைத்தார்.

மலர் முன்வைப்புரையை மலர்ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன் ஆற்றினார்.

அருந்தவபாலனின் கடந்த காலவழித்தடம் பற்றிய வரலாற்றுரையை பொ. அருணகிரிநாதன் வழங்கினார்.

நிகழ்வைதென்மராட்சி இலக்கிய அணி அமைப்பாளர் அ.வாசுதேவா முன்னிலைப்படுத்தினார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண சபை உறுப்பினர்களான கே.சயந்தன், கஜதீபன், சிவாஜிலிங்கம் மற்றும் அமைச்சர் பொ. ஐங்கரநேசன், முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச அதிபர் நா.வேதநாயகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தென்மராட்சி மக்கள் சார்பில் எதிர்க்கட்சி தலைவரிடம் கோரிக்கையுரை ஆற்றியவ.ஸ்ரீபிரகாஷ் தேசிய பட்டியல் மூலமாக அடுத்து வரும் இரண்டரை ஆண்டுக்கானபாராளுமன்ற உறுப்பினர் பதவியை அருந்தவபாலனுக்கு வழங்க ஆவன செய்ய வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார்.

இதற்குப் பதிலளித்த இரா.சம்பந்தன், அருந்தவபாலனுக்குக் கணிசமான மக்கள் ஆதரவுஇருப்பதால் அவரால் ஒரு இடத்தைப் பெற முடியும் எனப் பதிலளித்தார்.

தொடர்ந்துஉரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா மற்றும் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் க. அருந்தவபாலன் பாராளுமன்ற உறுப்பினராக பதவி பெறுவார்என நம்பிக்கையூட்டி உரையாற்றினர்.

வறிய மாணவரின் கல்வி வசதிக்காக அருந்தவபாலன் அறக்கட்டளை நிதியம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதனை சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் சார்பில் தலைவர்ந.சிவபாலன் (அம்பிகா மருந்தகம்), செயலாளர் வை.சிவராஜா (சிவா றேடிங் கோ)ஆகியோர் வணிகர்களிடமிருந்து திரட்டப்பட்ட ஒரு லட்சம் ரூபாவை வழங்கி ஆரம்பித்துவைத்தனர்.

விழாக்குழுச் செயலாளர் கா.சிவஞானசுந்தரம் நன்றியுரை ஆற்றினார்.

SHARE