கொலையா, தற்கொலையா? 3 பிள்ளைகளின் தந்தை துப்பாக்கி சூட்டில் பலி!

239

 

மிஹிந்தலை – கோனேவ பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (19) இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த நபர் 54 வயதுடையவர் என்றும் 3 பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த நபர் விவசாய பாதுகாப்பு நடவடிக்கைக்காக துப்பாக்கியை பெற்று கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் உயிரிழந்த நபரின் வீட்டின் பின்னால் இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த உயிரிழப்பு தற்கொலையாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE