ராஜூமுருகன் என்னிடம் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை – லிங்குசாமி

241

 

சமீபத்தில் வெளியான ஜோக்கர் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தை சமீபத்தில் பார்த்த லிங்குசாமி, “இப்படியும் ஒரு படத்தை யோசிக்க முடியுமா, எடுக்க முடியுமா என்பதை எல்லாம் தாண்டி எந்த பார்முலாவிலும் சிக்காமல் முக்கியமான படமாக ஜோக்கரை எடுத்து பார்க்க வைத்துவிட்டான் ராஜு.

உண்மையில் அவன் என்னிடம் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை, நான்தான் அவனிடம் கற்று வருகிறேன் என்றார்.

இயக்குனர் ராஜூமுருகன், லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE