அழுக்கு நீரை வெறும் 20 நிமிடங்களில் சுத்தமான நீராக்கும் அதி நவீன சாதனம்

281

625.500.560.350.160.300.053.800.748.160.70

சம காலத்தில் மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக விரைவில் உலக நாடுகளில் குடிநீருக்கான கேள்வி அதிகரிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இப்படியிருக்கையில் பூமியில் உள்ள நீரில் குடிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய அளவு நீரானது வெறும் 3 சதவீதம் மட்டுமே காணப்படுகின்றது. இதன் காரணமாக ஏனைய நீர் வகைகளை சுத்தம் செய்து குடி நீராகப் பயன்படுத்தும் அவசியம் எதிர்காலத்தில் உண்டாகும்.

இதனை செய்வதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. இவ் ஆராய்ச்சிகளின் பயனாக தற்போது அதி நவீன சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இச் சாதனமானது வெறும் 20 நிமிடங்களில் பாக்டீரியாக்கள் உட்பட ஏனைய மாசுக்களையும் நீக்கி 99.99 சதவீதம் சுத்தமான குடி நீரை தரவல்லது.

இதனை ஸ்டன்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

சிறிய சதுர வடிவான கறுப்பு நிற குவளை போன்ற இந்த சாதனம் சூரியனிலிருந்து கிடைக்கப்பெறும் கண்ணுக்கு புலப்படக்கூடிய ஒளிக் கதிர்களின் சக்தியைப் பயன்படுத்தி நீரை சுத்தம் செய்கின்றது.

SHARE