தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பி வி சிந்து வை பற்றி ஒரு ட்வீட் செய்திருந்தார்.
எனது வாழ்த்துக்கள் சிந்து ‘ இனி நான் சிந்துவின் ரசிகர்’ என்று பெருமையுடன் கூறியிருந்தார். இதை பற்றி சிந்துவின் தாயார் கூறுகையில் ” நான் அந்த ட்வீட்டை பார்த்த நொடியில் கண்ணீர் சிந்தினேன். அவர் எவ்வளவு பெரிய மனிதர். மிகப்பெரிய நடிகரான அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் எனது மகளின் ரசிகர் என்று அவர் குறிப்பிட்டு இருப்பதை படித்ததும் உண்மையிலேயே எனக்கு நெகிழ்ச்சியான தருணம் என்றார்.