புனர்வாழ்வு முகாம்களில் வைத்து விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து ஆராய ஐந்து பேரடங்கிய குழு ஒன்றை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்துள்ளார்.
வடக்கு சுகாதார அமைச்சின் விசாரணைக்கு உதவும் வகையில் இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழுவுக்கு மருத்துவக்கலாநிதி சிவன் சுதன் தலைமை ஏற்றுள்ளார்.
இந்தக்குழுவுக்கு உதவுவதற்காக வடக்கின் மாவட்டங்களில் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்த குழு அமைப்பு தொடர்பான தீர்மானம் அண்மையில் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது