கத்தி முனையில் மிரட்டி கொள்ளை!

250

Daily_News_6280742883683

அம்பலாங்கொட பகுதியில் பெண் ஒருவரிடம் இருந்த ரூபா 1.8 மில்லியன் பெறுமதியான பணத்தை இரண்டு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது.

தனியார் வங்கியிலிருந்து குறித்த பணத்தை திரும்பப் பெற்று மற்றைய வங்கியில் வைப்பிலிடுவதற்காக வைத்திருந்த பணமே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொள்ளையர்கள் கத்தி முனையில் மிரட்டியே இவ்வாறு கொள்ளையிட்டு சென்றுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE