யாழ், சாவக்கச்சேரி – நாவற்குழி பிரதேசத்தில் பெண்ணொருவர் எரியூட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான பெண், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி கைதடி பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தவரே இந்த கொலையை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சாவக்கச்சேரி பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.