ரியோ ஒலிம்பிக்- எந்த நாடுகளுக்கு எத்தனை பதக்கங்கள் கிடைத்துள்ளன?

284

கடந்த 5 ஆம் திகதி பிரேசிலில் கோலாகலமாக தொடங்கிய ரியோ ஒலிம்பிக்ஸ் நிறைவடைந்துள்ளது.

இந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வழக்கம்போல், அமெரிக்காவே அதிக பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

அமெரிக்கா ரியோ ஒலிம்பிக்ஸில் 121 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அதில், 46 தங்கம், 37 வெள்ளி மற்றும் 38 வெண்கலம் என மொத்தம் 121 பதக்கங்கள் அடங்கும்.

27 தங்கம் உட்பட 67 பதக்கங்களை வென்றுள்ள பிரித்தானியா பதக்க பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

பிரித்தானியா நாடு, 27 தங்கம், 23 வெள்ளி, 17 வெண்கலம் என 67 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

சீனா 26 தங்கம் உட்பட 70 பதக்கங்களுடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதில், 26 தங்கம், 18 வெள்ளி மற்றும் 26 வெண்கலம் அடங்கும்.

ரஷ்யா 4-வது இடதைப் பிடித்துள்ளது. 19 தங்கம், 18 வெள்ளி மற்றும் 19 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கங்களை வென்றுள்ளது.

42 பதக்கங்களுடன் ஜேர்மனி 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதில், 17 தங்கம், 10 வெள்ளி மற்றும் 15 வெண்கலம் அடங்கும்.

இதைத்தொடர்ந்து ஜப்பான் 41 பதக்கங்கள் பெற்று 6 வது இடம், பிரான்ஸ் 42 பதக்கங்கள் பெற்று 7வது இடம் தென் கொரியா 21 பதக்கங்கள் பெற்று 8வது இடம், இத்தாலி 28 பதக்கங்கள் பெற்று 9வது இடம், அவுஸ்திரேலியா 29 பதக்கங்களும் பெற்று 10வது இடம் என அடுத்தடுத்து பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

SHARE