ரியோ ஒலிம்பிக்கில் ஈட்டி ஏறிந்த போல்ட்

233

ரியோ ஒலிம்பிக் மைதானத்தில் ஜமைக்கா வீரர் போல்ட் ஈட்டி எறிந்து விளையாடிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் அனைவராலும் பேசப்பட்டவர் ஜமைக்காவின் மின்னல் வீரர் உசைன்போல்ட். இவர் ஓட்டப்பந்தைய போட்டியில் பல சாதனைகள் படைத்துள்ளார்.

தற்போது கூட ரியோ ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் தங்கம் வென்று அசத்தினார். ஆனால் ரியோ ஒலிம்பிக் தான் தன்னுடைய கடைசி ஒலிம்பிக் போட்டி என போல்ட் அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு வருத்தமாக உள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் பத்திரிக்கையாளர் Franck Ballanger என்பவர் போல்ட் ரியோ ஒலிம்பிக் மைதானத்தில் ஈட்டி எறியும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில் வேகமாக ஓடிவரும் போல்ட் ஈட்டியை எறிகிறார், அது வெகு தூரம் பறந்து 56 மீற்றர் வரை சென்றது. இதை அங்கிருந்த சிலர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

தற்போது அந்த வீடியோ தான் சமூகவலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

  625.0.560.320.500.400.194.800.668.160.90 (3) 625.0.560.320.500.400.194.800.668.160.90 (4)

SHARE