புரோன்ஸ்வீக் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

259

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புரோன்ஸ் வீக் சின்னதோட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களும், பொதுமக்களும் தோட்ட பகுதிகளில் சில குழுவினர் மது அருந்திவிட்டு திருவிழாக்களின்போதும் ஏனைய விசேட நிகழ்வுகளின்போதும் குழப்பம் விளைவிக்கின்றனர். இவ்வாறு குழப்பம் விளைவிக்கும் நபர்களுக்கெதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 22-8-2016 திங்கட்கிழமை அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இது தொடர்பாகத் தெரியவருகையில் மஸ்கெலியா புரோன்ஸ்வீக் சின்னதோட்டத்தில் கோவில் திருவிழாக்களோ வேறு எந்த விழாக்களோ பொதுமக்களால் நடாத்த முடியவில்லை. அங்கு இருக்கின்ற ஒரு குழுவினர் இவ்விழாக்களின்போது மது அருந்திவிட்டு குழப்பம் விளைவிக்கின்றனர்.

அத்தோட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற கோயில் திருவிழாவின் வரவு செலவு தொடர்பான கலந்துரையாடல் கடந்த 21-8-2016 அன்று அத்தோட்ட கோயிலில் இடம்பெற்றது. இதன்போது இந்த குறிப்பிட்ட குழுவினர் மது அருந்திவிட்டு குழப்பம் விளைவித்தனர். இவ்வாறு மலையக பகுதிகளில் பெரும்பாலான தோட்டப் பகுதிகளில் இவ்வாறான விழாக்களின்போது சில குழுக்கள் மது அருந்திவிட்டு குழப்பத்தை ஏற்ப்படுத்துகின்றனர். மது அருந்தினால் மாத்திரமே குழப்பம் விளைவிக்க முடியும் என்ற செயல் பொய்யானது. இக்குழுவினர் திட்டமிட்டே இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்கள் குடிபோதையில்தான் குழப்பம் விளைவிக்கின்றார்கள் என்பதை பொதுமக்களும், இளைஞர்களும் நம்பத் தயாராக இல்லை எனவே இவர்களின் அடாவடித்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இனிவருங்காலங்களில் மலையக தோட்டப் பகுதிகளில் பொதுமக்கள் அனைவரும் அமைதியாக விழாக்களை கொண்டாடவேண்டும். இதற்கு அரசாங்கமும், பொலிஸாரும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்றுகோரியே இந்த ஆர்பாட்டத்தை அங்குள்ள இளைஞர்களும், பொதுமக்களும் முன்னெடுத்தனர். கடந்த 22-8-2016 அன்று பிற்பகல் அத்தோட்டத்தில் அணிதிரண்ட இளைஞர்களும், பொதுமக்களும் குறித்த குழுவினருக்கு எதிராக பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது சம்பவ இடத்துக்கு வருகைதந்த மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி இது தொடர்பாக தோட்டப் பகுதிகளில் விழாக்கள் நடைபெறும்போது பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கினால் அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

நோட்டன்பிரிஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

unnamed (1)

SHARE