இலங்கையின் அரசியலும் அது சார்ந்தவர்களும் ஜோதிடம் எனும் மாய வலைக்குள் சிக்குண்டவர்களாக இருக்கின்றனர். அறிவு சார்ந்த செயற்பாட்டுக்கு அப்பால் ஜோதிட பலமே அங்கு மேலோங்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜோதிடத்தின் மீதான தீவிர பற்றால் இன்று ஆட்சியை இழந்தார். தற்போது சமகால ஜனாதிபதியும் ஜோதிடத்தின் பின்னால் ஓடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்கவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட குடும்பத்தினர் திருப்பதி கோவிலுக்கு யாத்திரை சென்றுள்ளனர்.
நிலூக்கா ஏக்கநாயக்க என்பவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ சோதிட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒருவராகும்.
மஹிந்த ராஜபக்சவிற்கு சோதிடம் பார்த்த சுமனதாஸ அபேகுணவர்தனவுக்கு தேசிய சேமிப்பு வங்கியின் செயற்பாட்டுப் பணிப்பாளர் பதவியை மஹிந்த வழங்கியிருந்தார். அதேபோன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜாதகத்தை பார்த்த நிலூக்கா ஏக்கநாயக்கவுக்கு மத்திய மாகாண ஆளுநர் பதவியை வழங்கியுள்ளார்.
ஏற்படவுள்ள ஆபத்துக்களில் இருந்து தப்பித்து கொள்வதற்காக நிலூக்காவின் ஆலோசனை கேட்டு திருப்பதி சென்ற ஜனாதிபதி உட்பட குடும்பத்தினர் அங்கு நிர்க்கதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி உட்பட குடும்பத்தினரை திருப்பதிக்கு அழைத்து சென்ற சாரதி உட்பட பாதுகாப்பு தரப்பினரும் கோவிலின் உள்ளே சென்ற போதும், அவர்களும் சாமி தரிசன நடவடிக்கையில் ஈடுபட்டமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 12 நிமிடங்கள் வரையில் ஜனாதிபதி உட்பட குடும்பத்தினர் பாதுகாப்பற்ற நிலையில் தனித்து விடப்பட்டிருந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.