தற்போதைய நல்லாட்சியிலும் நீதிமன்றம் சிற்சில அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றது

253

2028047572court2

தற்போதைய நல்லாட்சியிலும் நீதிமன்றம் சிற்சில அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கடந்த ஆட்சியில் மோசடி, ஊழல் ஆகியவற்றுடன் தொடர்புடைய பலர் நல்லாட்சியில் பாதுகாப்பாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணிக்கு தனிப்பட்ட ரீதியில் எவருடனும் பிரச்சினைகள் இல்லை ஆனால், இந்நாட்டு மக்களை ஏமாற்றி பொதுமக்களது பணத்தை கொள்ளையடித்தவர்கள் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்தும் பொறுப்பு மக்கள் விடுதலை முன்னணிக்கு இருப்பதாலே இதனை தெரிவிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றிட்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனவே மோசடிகாரர்கள் மற்றும் ஊழல்வாதிகள் உருவாவதை தடுக்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த, பசில், நாமல் உள்ளிட்ட பலர் நேரடியாகவே குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளதைப் போல் தற்போதைய ஆட்சியிலும் நிதி அமைச்சர் மீது நிதிமோசடி குற்றச்சாட்டைமக்கள் விடுதலை முன்னணி சுமத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க போன்றோர் கடந்த ஆட்சியில் நிதிமோசடி, ஊழல் தொடர்பான குற்றவாளிகளே ஆனால், தற்போதைய அரசு அவர்களை பாதுகாக்கவில்லையா? என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியின் பக்கம் வந்துவிட்டால் நீதிமன்றம் செல்லத் தேவையில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவித்துள்ளதாகவும், இதிலிருந்தே தற்போதைய ஆட்சி மோசடியுடன் தொடர்புடையவர்களை பாதுகாப்பது தெளிவாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE