நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருந்த அகுரஸ்ஸ போபாகொட கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான மாணவன் ஒருவருக்குஇ பரீட்சை எழுதுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் குறித்த மாணவன் உளரீதியில் பாதிக்கப்பட்டுள்ளான்.
இரு கைகளும் வலுவிழந்த குறித்த மாணவனுக்கு பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்குமாறுஇ பரீட்சை ஆணையாளரால் கையொப்பமிடப்பட்டு கடந்த 12ஆம் திகதி இல 6ஃ35ஃளுநுஃ2016 என்ற அறிவுறுத்தல் அடங்கிய கோவை ஒன்று பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
எனினும்இ அவ்வாறான அறிவித்தல் எதுவும் கிடைக்கவில்லையென குறிப்பிட்டுள்ள பரீட்சை மண்டப அதிகாரிஇ குறித்த மாணவனை பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கவில்லை.
இதுதொடர்பில் அகுரஸ்ஸ வலய பணிப்பாளரிடம் வினவியபோதுஇ சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளும் வரை எதனையும் தெரிவிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவன்இ பாடசாலை சீருடையையும் களையாமல் தொடர்ந்து அழுதவண்ணம் உள்ளதாக தயார் தெரிவித்தார்.