ரூ. 1.8 மில். கொள்ளை தொடர்பில் உடன் வந்தவர் கைது

256

அம்பலாங்கொடை நகரில் நேற்று (22) இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொள்ளைச் சம்பவத்தில், மோட்டார்சைக்கிளில் வந்து பெண் ஒருவரை வழி மறித்துக் கொள்ளையிட்ட சந்தேகநபர்கள் இருவரையும், வங்கியில் வைப்பிடச் சென்ற ரூபா 18,60,000 பணத்துடன் கைது செய்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த குறித்த கொள்ளைக்கு உடந்தையாக இருந்த, பணத்தை பறிகொடுத்த பெண்ணின் உறவினரின் மகன் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜாஎல பகுதியைச் சேர்ந்த குறித்த நபரே, கொள்ளை தொடர்பில் திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.robbery

SHARE