தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் கலக்கியவர் நடிகை கனிகா.
இவர் தன்னுடைய கணவர் ஷியாம் ராதாகிருஷ்ணனை விவாகரத்து செய்ய இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
இச்செய்தி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னை பற்றி வதந்தி சுற்றி வருகிறது. நானும் என் கணவரும் சந்தோஷமாக வாழ்கிறோம்.
நாங்கள் திருமணமான புதிதில் எப்படி மகிழ்ச்சியாக வாழ்ந்தோமோ அதுபோல் இன்றுவரை வாழ்ந்து வருகிறோம்.
ஆகையால் பொய்யான வதந்திகளை நம்பவேண்டாம் என்று விவாகரத்து செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.