ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது 65வது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வினை கொண்டாடுவதற்கு தற்போது யாழ் குடாநாடும் தயாராகியுள்ளது.
முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் 1951ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று பெரு விருட்சம்போல எழுச்சியடைந்துள்ளது.
இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதியுடன் 65 ஆண்டுகள் பூர்த்தியடையவுள்ள நிலையில் தனது 65வது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது.
யாழ்ப்பாணத்திலும் இந்நிகழ்வு கொண்டாடப்படவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் மேற்கொண்டுள்ளார்.
அந்தவகையில் யாழ். குடாநாட்டின் முக்கிய வீதிகள் யாவும் நீலநிற கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ். குடா நாடு முழுவதும் நீலநிறமாக காட்சியளிப்பதை காணக்கூடியதாக உள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் குருணாகலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.