ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க விமான நிறுவனத்திற்கு உத்தரவு

310

சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து இந்தியாவிற்கு பயணம் செய்த அந்நாட்டு குடிமகன் ஒருவருக்கு சுவிஸ் விமான நிறுவனம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மும்பை நகரை சேர்ந்த அமித் ஜே குமார் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் இருந்து மும்பைக்கு பயணமாகியுள்ளார்.

சுவிஸ் விமானத்தில் பயணம் செய்த அவர் தனக்கு சைவ உணவு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், ஜெயின் மதத்தை சேர்ந்த அவருக்கு விமான ஊழியர்கள் அசைவ உணவை பரிமாரியுள்ளனர். இதனை அறியாமல் அவரும் இறைச்சி உணவை உண்டுள்ளார்.

பின்னர், உண்மையை அறிந்த அவர் சுவிஸ் விமான நிறுவனத்தின் மீது நுகர்வோர் ஆணையத்தில் புகார் பதிவு செய்துள்ளார்.

இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்திடம் வந்துள்ளது.

அப்போது, பயணியின் விருப்பத்திற்கு எதிராக அவருக்கு இறைச்சி உணவு அளித்தது குற்றம். எனவே, பயணிக்கு சுவிஸ் விமான நிறுவனம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும், இந்தியாவில் இருந்து ஐரோப்பா செல்ல அல்லது ஐரோப்பாவில் இருந்து இந்தியா செல்ல அவருக்கு பிஸினஸ் கிளாஸ் பயணச்சீட்டு ஒன்றையும் சுவிஸ் விமான நிறுவனம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

625.500.560.350.160.300.053.800.748.160.70

SHARE