கல்மனதையும் கரைய வைக்கும் ஓவியம்

314

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரால் எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படுகின்றனர்.

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் Omran Daqneesh என்ற சிரியா சிறுவன், தனது முகத்தில் ரத்தம் வடிந்த நிலையில் அமர்ந்துகொண்டிப்பதை பார்த்து உலக மக்கள் அச்சம் கொண்டனர்.

அங்கு நடந்து வரும் உள்நாட்டு போரால், அங்கு வசிக்கும் குழந்தைகளின் மனநிலை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.

குழந்தைகளின் மனதில் யுத்தம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது என்பதை இந்த புகைப்படம் உணர்த்துகிறது என உளவியல் பேராசிரியர் Tugba Ozturk கூறியுள்ளார்.

Elin (வயது 8)

எலின் என்ற சிறுமி வரைந்துள்ள ஓவியம் இது. எனது வாழ்வில் இப்போது தான் ஒரு பிரேதத்தினை பார்க்கிறேன், என் கண்முன்னால் நபர் ஒருவரை சுட்டுக்கொல்வதை பார்த்த எனக்கு மிகவும் அச்சம் ஏற்பட்டது.

சிரியா யுத்தத்தால், எனது சகோதரிகள் மற்றும் தாயுடன் சேர்ந்து துருக்கிக்கு தப்பித்து வந்துவிட்டேன். ஆனால் எனது தந்தை சிரியாவில் தான் இருக்கிறார், அவருடைய விதி என்னவென்று எங்களுக்கு தெரியாது என கூறியுள்ளார்.

Hana (வயது 10)

சிரியாவில் அதிகமான எலும்புக்கூடுகளை பார்த்தேன் என்பதை ஓவியமாக வரைந்து காட்டியுள்ளார் Hana என்ற சிறுமி.

என்னை கனவில் வந்து இந்த எலும்புக்கூடு பயமுறுத்துகிறது, இரவில் தூங்கசெல்லும் போது எனது கண்களை மூடினால், அந்த எலும்புக்கூடு தான் முதல் ஆளாக வந்து நிற்கிறது, அது எப்போதும் என்னை பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறது, எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

Amine (வயது 7)

எனது அக்கா படித்துக்கொண்டிருக்கும் பள்ளியை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டனர், அவள் உள்ளே மாட்டிக்கொண்டிருப்பது போன்று கனவு கண்டு திடுக்கிட்டு விழித்தேன். அந்த கனவுக்கு பிறகு, எனது கண்கள் தூக்கத்தை தழுவவில்லை என கூறியுள்ளார்.

Rima (வயது 10)

எனது பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனைவரும் சந்தோஷமாக விளையாடுகிறார்கள். ஆனால் என்னால் நிம்மதியாக விளையாட முடியாத காரணத்தால் தனிமையில் இருக்கிறேன்.

எனது தோழிகளும் என்னுடன் விளையாட மறுக்கின்றனர். அவர்கள் என்னை பிச்சைக்காரி என அழைக்கின்றனர், அதனால் என்னை வீட்டுக்கு செல்லும்படி வற்புறுத்துகின்றனர், யாரும் என்னோடு பேசுவதில்லை என கூறியுள்ளார்.

Muhammed (வயது 8)

சிரியாவில் நடைபெற்ற போரால், எனது தந்தை இறந்துவிட்டார், இதன் காரணமாக எனது அம்மா, என்னுடைய 2 வயது தங்கை ஆகியோர் கடல் வழி பயணம் மேற்கொண்டு துருக்கி சென்றோம்.

எங்கள் பயணம் மிகவும் மோசமாக இருந்தது, நாங்கள் பயணம் செய்தபோது கடல் நீரானது மேலெழும்பி எங்களை அச்சுறுத்தியது என கூறியுள்ளான்.

Ahmed (வயது 10)

எனது தாயையும், சகோதரனையும் தீவிரவாதிகள் சந்தையில் விற்றுவிட்டனர், எங்கள் வீட்டின் கூரையின் மீது குண்டுமழை பொழிந்த படி இருக்கும். இதன் காரணமாக அங்கிருந்த வெளியேறி நான் மிகவும் மன உளைச்சலோடு எனது வாழ்நாளை கழிக்கிறேன் என கூறியுள்ளான்.

SHARE