அவுஸ்திரேலியாவில் பிரித்தானிய நாட்டு இளம்பெண்ணை குத்தி கொன்ற பிரான்ஸ் குடிமகன்

265

625.89.560.350.160.300.053.800.160.160.90

அவுஸ்திரேலியாவில் உள்ள ஹொட்டல் ஒன்றில் பிரித்தானிய நாட்டு இளம்பெண் ஒருவரை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குயின்ஸ்லேண்ட் நகருக்கு அருகில் உள்ள Home Hill என்ற நகர ஹொட்டலில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று இரவு 11.15 மணியளவில் அப்பகுதி பொலிசாருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது. புகாரை பெற்ற பொலிசார் குறிப்பிட்ட அந்த ஹொட்டலுக்கு விரைந்துள்ளனர்.

அப்போது, ஹொட்டலில் பிரித்தானிய நாட்டை சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவர் கொடூரமாக கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்து இருந்ததை கண்டு பொலிசார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

மேலும், அருகில் கத்தி குத்து காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 30 வயதான பிரித்தானிய நாட்டு நபரையும் அவுஸ்ரேலியாவை சேர்ந்த மற்றொரு நபரையும் பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எனினும், பிரித்தானிய நாட்டை சேர்ந்த நபர் இன்னும் அபாயக்கட்டத்திலேயே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூவர் மீதும் தாக்குதல் நடத்திய 29 வயதான பிரான்ஸ் நாட்டு குடிமகனை பொலிசார் கைது செய்தனர்.

நபரிடம் நடத்திய விசாரணையின்போது இளம்பெண்ணை கொல்லும்போது அவர் ‘அல்லாகூ அக்பர்’ என முழக்கமிட்டதாக தெரியவந்துள்ளது.

எனினும், இது தீவிரவாத தாக்குதலுக்கு தொடர்பு இல்லை என மறுத்துள்ள பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

SHARE