இத்தாலியில் பாரிய நிலநடுக்கம்!

288
 625.590.560.350.160.300.053.800.944.160.90

இத்தாலியில் 6.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அனர்த்தம் உள்ளூர் நேரப்படி 03:36 மணியளவில் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சுமார் 76 கிலோ மீட்டர் வரை நீடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தென் இத்தாலியில் அமைந்துள்ள ஒரு நகரத்தின் பாதி பகுதி பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் ரோம் நகரில் உள்ள சில கட்டிடங்கள் 20 வினாடிகள் வரை நடுங்கியுள்ளது.

மேலும் குறித்த பகுதியுடனான வீதிகள் இரண்டாக பிளந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர், பாலங்கள் சரிந்துள்ளதாகவும், Amatrice நகரிலேயே கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மேயர் Sergio Perozzi வானொலியில் தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் கணிசமான அளவு இலங்கையர்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதா? என்ற விடயம் தொடர்பாக இதுவரை இத்தாலி அரசோ, இத்தாலியில் இருக்கும் இலங்கைக்கான தூதரகமோ எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

இதற்கு முன்னர் இத்தாலியின் Aquila மாகாணத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு 6.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதில் 300 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE