உலகையே அதிர வைத்த டெல்லி கூட்டு பாலியல் வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா திகார் சிறையில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி இரவு ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கும், குற்றவாளிகளின் தாக்குதலுக்கும் உள்ளான நிர்பயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் சிறார் ஒருவர் உட்பட 6 பேர் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டது.
இதில் மரண தண்டணை விதிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வினய் சர்மா தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
கடந்த ஆண்டு சிறையில் தன்னை மற்ற கைதிகள் தாக்குவதாகவும், இதனால் தனக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வினர் சர்மா கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2013ம் ஆண்டு நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான ராம் சிங் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது.