பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க கோரி எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்துள்ள பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்துள்ள கூட்டமைப்பு உறுப்பினர்கள்!

248

sampanthan

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க கோரி எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்துள்ள பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது குறித்த பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் இவ்வாறு கூறியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டமானது எமது நாட்டில் என்ன செய்துள்ளது என்பதை நாம் சற்று பின்நோக்கி சென்று பார்க்க வேண்டிய தேவையுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டம் இலங்கையில் கொண்டு வரப்பட்ட பின்னர் இந்த நாடு ஒரு பயங்கமான நாடாகவும், பயங்கரமான சூழ்நிலையை கொண்டுள்ள நாடாகவும் மாறியுள்ளது.

இந்த சட்டம் காரணமாக பல்வேறு படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், பல்வேறுபட்ட விடயங்களுக்கும் இந்த பயங்கரவாத தடைச் சட்டம் துணைபோயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE