வவுனியா குடியிருப்பு இராணுவ முகாம் கையளிப்பு நிகழ்வு! ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு.

256

வவுனியா, குடியிருப்பு, கலாசார மண்டபத்தில் கடந்த 26 வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த இராணுவ முகாம் இன்று உத்தியோக பூர்வமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இது குறித்த நிகழ்வு இன்று மாலை 3 மணிக்கு இடம்பெற்றது. இதன்போது செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா மாவட்ட பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட கோதும், அனுமதி இல்லை என்ற பதிலே கிடைக்கப்பெற்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (6)

குடியிருப்பு இராணுவ முகாமானது யுத்த காலங்களில் சோதனைச் சாவடியாக செயற்பட்டதுடன், பலர் இந்த முகாமில் இருந்த இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டும் இருந்தனர்.

குறித்த இராணுவ முகாமை சூழ்ந்து கோவில்கள், பாடசாலை, மக்கள் குடியிருப்பு, சிறுவர் பூங்கா மற்றும் வவுனியா பொது வைத்தியசாலை போன்றன அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (7)

SHARE