நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச நல்லாட்சியை எதிர்க்கும் செயற்பாடுகளில் தான் முன்னிலை வகிக்காமல் இன்னொருவரை சார்ந்து நிற்கப்போகின்றார் என்பது அவரின் உரைமூலமாக தெளிவுபடுகின்றது.
இது வரைக்காலமும் மஹிந்த ராஜபக்ச தற்போதைய ஆட்சிபற்றி குறை கூறிக்கொண்டு வந்தார். நேரடியாகவே நல்லாட்சியை எதிர்க்கும் செயற்பாடுகளை செயற்படுத்தி வந்தவர்.
இறுதியில் சுதந்திர கட்சியில் அல்லது கூட்டு எதிர்கட்சியின் மூலம் நல்லாட்சியினை எதிர்க்க முடியாது என்ற காரணத்தினால் புதிய கட்சி ஆரம்பிக்கும் செயற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வந்தார்.
இதற்காக மஹிந்த ராஜபக்ச தனது ஆதரவாளர்களுடன் இரகசிய கூட்டங்களையும் இரவு வேளைகளில் ஏற்படுத்தியிருந்தார் எனவும் செய்திகள் வெளியாகின.
எனினும், தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய கட்சி ஆரம்பித்தால் இரகசியங்களை வெளியிடுவேன் என எச்சரிக்கை விடுத்த பின்னர், மஹிந்த கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் பின்வாங்குகின்றார் என்பது அறிய வந்துள்ளது.
அண்மையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மஹிந்த ராஜபக்ச, புதிய கட்சி ஆரம்பிப்பதை எவராலும் தடுக்க முடியாது. எனினும் அதனை நான் ஆரம்பிக்க போவதில்லை. அவ்வாறு எவரும் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
இவ்வாறு மிரட்டல்களை விடுத்தால் இல்லாதவர்களும் கட்சி ஆரம்பிக்கவே முயற்சிப்பார்கள் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரகசியம் வெளிடும் எச்சரிக்கைக்கு பின்னர் மஹிந்த இவ்வாறு எதற்காக பின்வாங்குகின்றார்? புதிய கட்சியை ஆரம்பிக்க போகும் அந்த மர்ம நபர் யார்? எனும் சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளது.
எவ்வாறாயினும் தொடர்ந்தும் பின்னடைவுகளை சந்தித்து வரும் மஹிந்த புதிய கட்சி தொடர்பில் முக்கியமாகதொரு நபரையே அறிமுகப்படுத்துவார். அவருக்கு பின்னால் நின்று நிழலாகவே மஹிந்த செயற்படுவார் என்பது உறுதி.