ரணிலுக்கும் மஹிந்தவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம்! முக்கிய அமைச்சரிடம் ஆதாரம்

248

1 (6)_2

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், இது பற்றி கூட்டு எதிர்க்கட்சி மஹிந்தவிடம் எந்த கேள்வியும் எழுப்பவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 2007ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டு கட்சிகளும் சேர்ந்து செயற்படுவதாக குறித்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை ரணிலும் மஹிந்தவுமே கைச்சாத்திட்டுள்ளனர்.

இதைப்பற்றி கூட்டு எதிர்க்கட்சியினர் மஹிந்தவிடம் எந்த கேள்விகளையும் எழுப்பவில்லை. ஆனால் மைத்திரியிடம் மட்டும் கேள்விகளை எழுப்புகின்றனர் என சுட்டிக்காட்டினார்.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சேர்ந்து ஒற்றுமையாக செயற்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் கூறினார்.

மேலும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சம்பந்தமே இல்லாமல் வெறுப்பை வெளிப்படுத்துவதாகவும், இவர்களால் ஒருபோதும் தனித்து ஒரு கட்சியை ஆரம்பிக்க முடியாது என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

SHARE