கொழும்பு – ஆமர் வீதியில் விடுதி ஒன்றில் இருந்து இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஐந்து நாட்கள் கடந்த நிலையிலும் சடலம் உள்ளே இருப்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. எனினும் இன்று காலை குறித்த இடத்தில் துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த ஆமர்வீதி பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
குறித்த நபரை அடையாளம் காண்பதற்காக அவருடைய அடையாள அட்டையைின் பிரதியை ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.