கொழும்பு – பேலியகொட பாலத்திற்கு கீழே சுமார் ஒரு மணி நேரமாக சடலம் ஒன்று மிதந்து கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேலியகொட பாலத்தின் வழியே கடந்து செல்லும் பலர் இன்று காலையிலிருந்து குறித்த சடலத்தை பார்வையிட்டுச் செல்வதுடன், புகைப்படங்களையும் எடுக்கின்றனர்.
ஆனால் மேற்கொண்டு எடுக்க வேண்டிய எந்த நடவடிக்கைகளையும் எடுத்ததாக தெரியவில்லை.
இது குறித்து பேலியகொட பொலிஸாரிடம் வினவியபோது,
“குறித்த சம்பவம் பற்றி எங்களுக்கு எதும் தெரியாது என்றும், எந்தத் தகவல்களும் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை” என்றும் தெரிவித்தனர்.
மேலும், சடலம் பேலியகொட பாலத்திற்கு கீழே ஒருமணி நேரத்திற்கும் மேலாக மிதக்கின்றது. இதில் உயிரிழந்த நபர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும் கூறப்படுகின்றது.
அடையாளம் காணப்படாத இந்த சடலத்தை மீட்பதற்கும், மேற்படி எடுக்கவேண்டிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. தலைநகரான கொழும்பில் இவ்வாறு கவனிப்பாரற்று சடலம் கிடப்பது அனைவரிடமும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இடத்தில் ஒரு பொலிஸ் அதிகாரிகள் கூட இருக்கவில்லை. தகவல் தெரிந்தும் எந்த அதிகாரிகளும் விரைந்து செயற்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.