நுவரெலியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜீத்பிரோமதாச ஆகியோர் பயணித்த உலங்கு வானூர்தி அனர்த்தத்தினால் மரக்கரி தோட்டத்தில் அவசரமாக தரையிரக்கப்பட்டது.
வருமானம் குறைந்த 850 குடும்பங்களுக்கு வீடமைப்பு திட்டத்திற்கான 1100 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் காசோலைகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இன்று நுவரெலியா சினிசிட்டா மண்டபத்திற்கு வருகை தந்தபோதே குறித்த சம்பவம் நடந்துள்ளது.
கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு வருகை தந்த தனியார் உலங்கு வானூர்தியே இவ்வாறு நுவரெலியா லீக்ஸ் பயிர்ச்செய்கை தோட்டத்திலே அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
காலநிலை சீர்கோட்டினால் நுவரெலியாவில் முகில் நிறைந்து காணப்பட்ட நிலையில் உலங்கு வானூர்தி தரையிறக்கும் போது மின்கம்பத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாக இருந்த நிலையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
உலங்கு வானூர்தியில் பயணித்த அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. பாதுகாப்பாக மீட்கப்பட்டு பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த நிகழ்விற்கு சென்றுள்ளனர்.
அவசரமாக தரையிரக்கப்பட்ட உலங்கு வானூர்தி தற்போது லீக்ஸ் பயிர்ச்செய்கை செய்யும் மரக்கரி தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது