இந்த பழங்களில் உள்ள சத்துக்கள் பற்றி தெரியுமா?

276

625.500.560.350.160.300.053.800.748.160.70

நோயில்லாத வாழ்க்கைக்கு சத்தான உணவுகள் மிக அவசியம்.

குறிப்பாக உணவில் காய்கறிகள் மட்டுமின்றி பழங்களையும் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உடலுக்கு சத்தான ஆரோக்கியம் தரும் பழங்களை ப்ரஷ் ஜூஸ் செய்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

கேரட்

கேரட் ஜூஸ் செய்து தினமும் குடித்து வருவதால் பல நோய்கள் வராமல் தடுக்கும். கேரட்டில் கரோட்டின் புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி, குடற்புண், வயிற்று வலி, ஜீரண சக்தியை தூண்டி உணவை செரிக்க வைப்பது போன்ற பல பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது.

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் குறைவான கலோரி மற்றும் அதிகமான நார்ச்சத்துகள் இருக்கிறது, எனவே தினமும் ஆப்பிளை ஜூஸ் செய்து குடித்தால், உடம்பில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கச் செய்கிறது, நரம்புகள் தொடர்பான பிரச்சனைகள், பல வகையான வாத நோய், பல் ஈரல் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

வெள்ளரிக்காய்

நீர்ச்சத்து அதிகம் கொண்ட வெள்ளரிக்காயை தினமும் ஜூஸ் செய்து குடித்து வந்தால், எப்போதும் இளமையாக இருக்கலாம், மேலும் பெண்களுக்கு உண்டாகும் மார்பக புற்று நோயை தடுக்கிறது, உடல் எடையை குறைப்பதற்கு உதவுவதுடன் கருவளையத்தை போக்குகிறது.

அன்னாசி

அன்னாசி பழத்தில் விட்டமின்கள் ம்ற்றும் கரோட்டின் போன்ற சத்துகள் உள்ளதால் தினமும் ஜூஸ் செய்து குடித்து வந்தால், பல வகையான புற்று நோய்கள், சிறுநீரப் பிரச்சனைகள், மலச்சிக்கல், இதயம் சார்பான பிரச்சனைகளை சரிசெய்கிறது.

தர்பூசணி
தர்பூசணி

விட்டமின்கள், நீர்ச்சத்துகள் அதிகமாக கொண்ட தர்பூசணி ஜூஸ் வெயில் காலத்தில் மிகவும் ஏற்றதாக உள்ளது. இந்த பழத்தினை தினமும் ஜூஸ் செய்து குடிப்பதால் உடம்பிற்கு குளிர்ச்சியை தருவதோடு, ஆஸ்துமா, புற்றுநோய், மாரடைப்பு, வயிற்று தொடர்பான பிரச்சனைகள் போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

SHARE