எந்த காரணத்திற்காகவும் இராணுவ முகாம்கள் அகற்றப்படாது!-இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஸாந்த டி சில்வா

286

1_1_appoinment1

எந்த காரணத்திற்காகவும் இராணுவ முகாம்கள் அகற்றப்படாது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஸாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு பாதுகாப்பு மாநாடு தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தேசிய பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தேசியப் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக வடக்கு கிழக்கில் நிறுவப்பட்டுள்ள முகாம்களை அகற்ற முடியாது.

போர் இடம்பெற்ற பகுதிகளில் அமைதிச் சூழ்நிலை நிலவி வருகின்றது.

போர் இடம்பெற்ற பகுதிகளின் சில காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சமாதானம் நிலவுகின்றது என்பதனை உலகிற்கு எடுத்துரைக்கும் நோக்கில் கொழும்பு பாதுகாப்பு மாநாடு நடத்தப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, தேசிய பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் பணத்தில் சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் நாம் அனைத்து பிரஜைகளினதும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகின்றது எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஸாந்த டி சில்வா கூறியுள்ளார்.

SHARE