யாழ்ப்பாணம் செல்லும் ஐ.நா செயலாளர்!-பான் கீ மூன்

587
 7670095-11858378-1-900x450

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான் கீ மூன் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி விவகாரங்களில் கவனம் செலுத்தவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர் தனது வியஜத்தின் போது யாழ்ப்பாணத்துக்கும் சென்று பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனை தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் வைத்து நேற்று இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

ஆசிய நாடுகளுக்கான விஜயத்தினை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கவுள்ளார்.

தனது முதலாவது விஜயமாக மியன்மார் செல்லும் அவர், அங்கிருந்து புதன்கிழமை இலங்கைக்கான பயணத்தை ஆரம்பிப்பார்.

இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் கலந்துரையாடவுள்ள அவர், ஐ.நாவின் பூகோள அபிவிருத்தி அடைவுகள் என்ற தொனிப் பொருளில் கொழும்பில் விஷேட உரை ஒன்றையும் நிகழ்த்தவுள்ளார்.

இலங்கை விஜயத்தின் போது, அமைதியை ஊக்குவித்தல் மற்றும் சமூகங்களிடையே அபிவிருத்தியை ஏற்படுத்தும் விடயத்தில் கவனம் செலுத்துவார்.

யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், அங்கு இடம்பெயர்ந்து மீளக்குடியேற்றப்பட்ட மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடுவார்.

அத்துடன், காலியில் நடக்கும் இளைஞர் நல்லிணக்க மாநாட்டிலும் பான் கீ மூன் உரையாற்றவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE