யாழ்ப்பாணத்தில் அரிய வகை வெள்ளை நாகப்பாம்பு ஒன்று நேற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நாகமானது சுமார் ஆறு அடி நீளமானது எனவும் கூறப்படுகின்றது.
யாழ். பொலிகண்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் அமைந்துள்ள கிணற்றில் இருந்தே இந்த அதிசய நாகம் பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நாகத்தினை அப்பகுதி மக்கள் யாழ். வள்ளிபுர ஆழ்வார் ஆலயப்பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.