சிறைச்சாலையை அழகுபடுத்திய கைதிகள்! நினைவுச்சின்னம் வழங்கி வைத்த நீதிபதிகள்

597

மட்டக்களப்பு சிறைச்சாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஓவியங்கள் வியாழக்கிழமை நீதிபதிகளினால் திறந்து வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யு.அக்பர் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன் ஆகியோரின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும், மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள இரண்டு கைதிகளினால் மட்டக்களப்பு சிறைச்சாலை சுவரில் வரையப்பட்ட ஓவியங்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா மற்றும் களுவாஞ்சிகுடி மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றங்களின் நீதிபதி எம்.ஐ.றிஸ்வி ஆகியோர் திறந்து வைத்து திரை நீக்கம் செய்து வைத்தனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் கே.எம்.யு.அக்பர் மற்றும் பிரதம சிறை அலுவலகர் என்.பிரபாகரன் மற்றும் சிறைச்சாலை கைதிகள் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன்புரி உத்தியோகத்தர்கள் சிறைச்சாலை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது இந்த ஓவியங்களை வரைந்த இரண்டு கைதிகள் நினைவுச்சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு முன்னாலுள்ள சுவரில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

கைதிகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையிலும் அவர்களின் ஆற்றலைக் கொண்டு இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம சிறைஅலுவலகர் என்.பிரபாகரன் தெரிவித்தார்.

SHARE