வயிற்றில் இருந்த குழந்தை காணவில்லை… வடிவேல் பாணியில் பொலிசிற்கு வந்த புகார்!…

278

வடிவேலுவின் கிணற்றைக் காணோம் என்ற பாணியில் தன் வயிற்றில் வளர்ந்து வந்த குழந்தை கருவை காணவில்லை என்று பெண் ஒருவர் புகார் தருவித்துள்ளார்.

இந்தியாவில் வேலூர் மாவட்டத்தின் ஆற்காடு அருகில் உள்ள திமிரியைச் சேர்ந்த கண்ணன் – யசோதா தம்பதியினர். 25 வயதானா யசோதா கர்ப்பமுற்றிருந்தார். இவர் தாமரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கிளினிக் நடத்தி வந்த, கமலா என்ற பெண் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவரிடம் மருந்துகளை பெற்று சாப்பிட்டு வந்து கொண்டிருந்திருக்கின்றார். எட்டு மாதம் அடைந்த யசோதா, அவரிடம் பிரசவம் பார்க்காமல் மற்றொரு பெரிய மருத்துவமனையில் பார்க்க முடிவு செய்து அங்கே சென்றுள்ளார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் கருவே இல்லை என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த யசோதா பழைய மருத்துவமனைக்கு சென்று விசாரிக்கையில் கமலா ஒரு போலி டாக்டர் என்று தெரியவந்துள்ளது. இவர் கொடுத்த தவறான மருந்துக்களால் வயிற்றில் உள்ள கரு கொஞ்சம் கொஞ்மாக கலைந்துவிட்டது. ஆனாலும் கரு உள்ளது என்று ஆயிரக்கணக்கில் பணத்தை வசூல் செய்துள்ளார். கமலா தலைமறைவாகி விட்டார்.

யசோதா-கண்ணன் தம்பதியினர் கருவில் உள்ள குழந்தையை காணவில்லை என்று புகாரை திமிரி காவல் நிலையத்தில் கொடுத்துள்ளனர். காவலர்கள் புகாரைப் பெற்று போலி மருத்துவர் கமலாவை தேடி வருகின்றனர்.

 

SHARE