வர்த்தகரின் கொலைக்கு 40 மில்லியனுக்கு மேற்பட்ட கொடுக்கல் வாங்கல் ஒன்றினை மையப்படுத்தி இடம்பெற்றதா என பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சீ.சீ.ரி.வி.கமராக்கள் பல சோதனைக்கு!

269

பம்பலபிட்டி , கொத்தலாவல எவனியூ பகுதியில் வைத்து கடத்தப்பட்ட நிலையில் மாவனல்லையில் வைத்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சகீப் சுலைமானின் கடத்தல் மற்றும் படுகொலைக்கு 40 மில்லியனுக்கு மேற்பட்ட கொடுக்கல் வாங்கல் ஒன்றினை மையப்படுத்தி இடம்பெற்றதா என பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெள்ளவத்தை பிரதேசத்தின் பிலபல வர்த்தகர் ஒருவரிடம் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை நாடத்தி வருவதாக விசாரணைகளுக்கு பொறுப்பான் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இவரை விட வெள்ளவத்தை பகுதியின் மேலும் இரு வர்த்தகர்களிடமும் பொலிஸார் விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளதாக குறித்த உயர் பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இதனை விட மேலதிக விசாரணைகளுக்காக கொள்ளுபிட்டியில் இருந்து தெஹிவளை வரையிலான அனைத்து சீ.சீ.ரி.வி. கமராக்களையும் சோதனைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ள விசாரணையாளர்கள் அது தொடர்பில் பிரத்தியேகமாக மூன்று பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி மொத்தமாக இவ்விசாரணைகளுக்கு என 11 பொலிஸ் குழுக்கள் விசாரணையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிராந்தியத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முஸ்லிம் வர்த்­தகர் மொஹமட் சகீப் சுலை மான் படு­கொலை செய்­யப்­பட்ட நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார். மாவ­னல்லை ஹெம்­மாத்­த­கம வீதியின் உக்­கு­லே­கம எனும் இடத்தில் உள்ள பள்­ளத்­தாக்கு ஒன்­றி­லி­ருந்தே அழு­கிய நிலையில் அவர் இவ்­வாறு நேற்று முன்­தினம் இரவு சட­ல­மாக மீட்­கப்பட்­டுள்ளார்.

இந் நிலையில் கோடீஸ்­வர வர்த்­தகர் சகீப் கடத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட விவ­காரம் குறித்து குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் கேகாலை பிராந்­திய பொலிஸ் அத்­தி­யட்சர் ஆகி­யோரின் கீழ் 8 சிறப்புக் குழுக்கள் அமைக்­கப்­பட்டு விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. நேற்று மாலை­யாகும் போதும் இந்த விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­பட்ட சந்­தேக நபர்­க­ளாக இருக்­கலாம் எனும் சந்­தே­கத்தில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வி­னரால் வெள்­ள­வத்தை, தெமட்­ட­கொடை மற்றும் காலி வீதி பகு­தி­களைச் சேர்ந்த ஐவர் அடை­யாளம் காணப்­பட்­டுள்ள நிலையில் அவர்கள் நட்­டி­லி­ருந்து தப்பிச் செல்­வதை தவிர்க்கும் முக­மாக கட­வுச்­சீட்­டுக்கள் முடக்­கப்­பட்­டுள்­ளன.

நேற்று முன் தினம் மாலை­வேளை, மாவ­னெல்லை பொலி­ஸா­ருக்கு தகவல் ஒன்று கிடைக்கப் பெற்­றுள்­ளது. உக்­கு­லே­கம பள்­ளத்­தாக்கில் சில தினங்­க­ளுக்கு முன்னர் இறந்­தி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­படும் சடலம் ஒன்று உள்­ள­த­கவும் துர்­வாடை வீசு­வ­தா­கவும் அதில் தகவல் வழங்­கிய பொது மகன் குறிப்­பிட்­டுள்ளார். இத­னை­ய­டுத்து ஸ்தலத்­துக்கு விரைந்­துள்ள மாவ­னெல்லை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தலை­மை­யி­லான குழு­வினர் சட­லத்தை பார்­வை­யிட்­டுள்­ளனர். அடை­யாளம் காண முடி­யாத நிலையில் இருந்த குறித்த சடலம் மீதான விசா­ர­ணை­களை மாவ­னெல்லை பொலிஸார் ஆரம்­பித்­துள்­ளனர்.இந்­நி­லையில் ஏற்­க­னவே பம்­ப­ல­பிட்­டியில் கடத்­தப்­பட்ட வர்த்­தகர் சகீப் தொடர்பில் கேகாலை பகு­தியில் இருந்து கப்பம் கோரப்­பட்­டி­ருந்த நிலையில், சகீப் தொடர்­பி­லான தக­வல்கள் கேகாலை பொலிஸ் பிராந்­தி­யத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. பம்­ப­ல­பிட்டி பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வி­னரால் மாவ­னெல்லை பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்ட தக­வல்­களை வைத்தும் மாவ­னெல்லை பொலிஸார் குறித்த அடை­யாளம் தெரி­யாத சடலம் மீது விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

இதன் போது கொழும்­பி­லி­ருந்து வழங்­கப்­பட்­டி­ருந்த சகீப் தொடர்­பி­லான தக­வல்­களில், அவர் இறு­தி­யாக அணிந்­தி­ருந்த ஆடை தொடர்­பி­லான தக­வல்கள், குறித்த அடை­யாளம் தெரி­யாத சட­லத்­துடன் ஒத்துப் போவதை மாவ­னெல்லை பொலிஸார் கண்­ட­றிந்­துள்­ளனர்.

அத­னை­ய­டுத்து கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஏ.டீ.ஏ. சேர­சிங்க ஊடாக இது குறித்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நிஸாந்த டி சொய்­ஸா­வுக்கு தகவல் பரி­மாற்­றப்­பட்­டுள்­ளது.

அதன்­படி உட­ன­டி­யாக செயற்­பட்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நிஸாந்த டி சொய்ஸா, குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நெவில் டி சில்வா தலை­மையில் பம்­ப­ல­பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்ட குழு­வி­னரை கடத்­தப்­பட்ட கோடீஸ்­வர வர்த்­தகர் சகீப்பின் குடும்ப உறுப்­பி­னர்கள் சில­ருடன் மாவ­னெல்லை பகு­திக்கு இரவு வேளை­யி­லேயே அனுப்பி வைத்­துள்ளார்.

அங்கு சென்ற குற்றத் தடுப்புப் பிரிவின் குழு, வர்த்­தகர் சகீப்பின் குடும்ப அங்­கத்­த­வர்கள் ஊடாக குறித்த சட­லத்தை அடை­யாளம் காண முற்­பட்­டுள்­ளனர். சகீப் இறு­தி­யாக அணிந்­தி­ருந்­த­தாக கூறப்­படும் நீல நிற டெனிம் நீண்ட காற்­சட்டை மற்றும் அதற்குள் அணிந்­தி­ருந்த பிஜாமா ரக அரைக் காற்­சட்டை ஆகி­வற்­றையும் காலுறை மற்றும் தலை­முடி உள்­ளிட்ட அடை­யா­ளங்­க­ளையும் வைத்து சகீபின் தந்தை மற்றும் மனைவி உள்­ளிட்டோர் சட­லத்தை அடை­யாளம் கண்­டுள்­ளனர்.

முகம் உள்­ளிட்ட சட­லத்தின் பல பகு­திகள் கடு­மை­யாக அழு­கி­யி­ருந்த நிலையில் சட­லத்தின் மேல் பகு­தியில் எவ்­வித ஆடை­களும் இருக்­க­வில்லை. கீழ் பகு­தியில் டெனிம் காற்­சட்­டையும் பிஜாமா அரைக்­காற்­சட்­டையும் இடுப்பில் இருந்து சற்று கீழ் நோக்கி இறக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் வயிறு உள்­ளிட்ட பகு­தி­களில் காயங்­களைக் காட்டும் அடை­யா­ளங்கள் காணப்­பட்­டன.

ஸ்தலத்தை குற்றப் பிர­தே­ச­மாக பிர­க­டனம் செய்த மாவ­னெல்லை பொலிஸார், பொலிஸ் தட­ய­வியல் பிரி­வி­ன­ரையும் மோப்ப நாயி­னையும் வர­வ­ழைத்து விசா­ர­ணை­களை நேற்று காலை ஆரம்­பித்­தனர். சம்­பவ இடத்­துக்கு வந்த மாவ­னெல்லை பிர­தான நீதிவான் மஹிந்த லிய­ன­கம நீதிவான் நீதி­மன்ற விசா­ர­ணை­களை நடத்­தி­ய­துடன் சட­லத்தை மேல­திக ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தவும் பிரேத பரி­சோ­தனை மேற்­கொள்­ளவும் உத்­த­ரவு பிறப்­பித்தார். அதன்­படி நேற்று பிற்­பகல் கேகாலை போதனா வைத்­தி­ய­சா­லையில், கேகாலை பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி ரமேஷ் அழ­கி­ய­வண்ன முன்­னி­லையில் பிரேத பரி­சோ­த­னைகள் இடம்­பெற்­றன. இதன் போது வர்த்­தகர் சகீப் கடத்­தப்­பட்ட கடந்த 22 ஆம் திக­தியே உயி­ரி­ழந்­துள்­ள­மையும், தட்­டை­யான ஆயுதம் ஒன்­றினால் அவரின் கன்­னத்­துக்கு மேற்­ப­கு­தியில் அதா­வது தலையின் முற்­ப­கு­தியில் பலத்த தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் இதன் கார­ண­மாக அவரின் மண்டை ஓடு சுக்கு நூறா­கி­யுள்­ள­தா­கவும் பிரேத பரி­சோ­த­னையில் தெரி­ய­வந்­துள்­ளது. இதனால் தலையின் உட்­ப­கு­தியில் அதா­வது மூளைப் பகு­தியில் இரத்தக் கசிவு ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் இத­னா­லேயே மரணம் சம்­ப­வித்­துள்­ள­தா­கவும் சிரேஷ்ட சட்ட வைத்­திய அதி­காரி ரமேஷ் அழ­கி­ய­வண்­னவின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இத­னை­விட சகீப் கொலை செய்­யப்­பட்ட தினம் இறு­தி­யாக அவர் இரவு உண­வுக்­காக உட்­கொண்ட ஆகாரம் சமி­பா­ட­டை­யவும் முன்­ன­ரேயே அவர் கொலை செய்­யப்­பட்­டுள்­ளமை பிரேத பரி­சோ­த­னையில் தெரி­ய­வந்­துள்­ளது.

வர்த்­தகர் சகீப் கடத்­தப்­பட்ட தினமே கொலை செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் கடத்­தப்­பட்டு ஒரு மணி நேரத்­துக்குள் இந்த கொலை இடம்­பெற்­றி­ருப்­ப­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்பான் உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார். கொலை செய்­யப்­பட்ட பின்னர் சகீபின் சடலம் இவ்­வாறு மாவ­னெல்லை – ஹெம்­மாத்­த­கம வீதியின் பள்ளத் தாக்கில் கைவி­டப்­பட்­டுள்­ள­தா­கவும், இக்­கொலை தொடர்பில் கேகாலை மற்றும் மாவ­னெல்லை ஹெம்­மாத்­த­கம ஆகிய பகு­திகள் தொடர்பில் நன்கு பரீட்­சயம் உள்ள ஒரு­வ­ருக்கு தகவல் தெரிந்­தி­ருப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் அதிகம் உள்­ள­தா­கவும் அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

அத்­துடன் கடந்த செவ்­வா­யன்று வர்த்­தகர் சகீபை விடு­விக்க அவ­ரது தந்­தை­யிடம் 2 கோடி ரூபாவை கப்­ப­மாக கோரி­ய­மை­யா­னது விசா­ர­ணை­களை திசை திருப்பும் வேலை எனவும் கப்பம் கோரும் போதும் சகீப் கொலை செய்­யப்­பட்டு சுமார் 36 மணி நேரம் கடந்­தி­ருந்­தி­ருக்க வேண்டும் எனவும் விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ள­தா­கவும் குறித்த உயர் அதி­காரி மேலும் தெரி­வித்தார்.

இத­னி­டையே நேற்று முற்­பகல், இக்­கொலை தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் முக­மாக சிறப்பு ஆலோ­சனைக் கூட்டம் ஒன்று மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பரின் ஆலோ­ச­னைக்கு அமைய நடத்­தப்­பட்­டுள்­ளது. இதில் பம்­ப­ல­பிட்டி பொலிஸ் நிலை­யத்தை அண்­மித்த அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளி­னதும் பொறுப்­ப­தி­கா­ரிகள், கொழும்பு தெற்கு மற்றும் மத்­திய பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சர்கள் குற்றத் தடுப்புப் பிரிவின் அதி­கா­ரிகள் உள்­ளிட்ட குழு­வினர் கலந்­து­கொண்­டுள்­ளனர்.

கடத்தல் மற்றும் கொலை­யுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­களை கைது செய்ய 8 பொலிஸ் குழுக்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்­தன முன­சிங்க, கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்­தி­நா­யக்க, கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பாலித்த பணா­மல்­தெ­னிய மற்றும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் நிஸாந்த டி சொய்ஸா ஆகி­யோரின் மேற்­பார்­வை­யிலும் கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சேர­சிங்­கவின் மேற்­பார்­வை­யிலும் இந்த குழுக்கள் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கின்­றன. பிர­தான விசா­ரணைக் குழு­வுக்கு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நெவில் டி சில்வா தலைமை தாங்­கு­கின்றார்.

அத்­துடன் பொலிஸ் விசா­ர­ணை­க­ளுக்கு மேல­தி­க­மாக உத­வி­களைப் பெற்­றுக்­கொள்ள குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­தி­னதும் தேசிய உளவுப் பிரி­வி­னதும் ஒத்­து­ழைப்பும் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

நேற்று மாலை வரை பொலிஸார் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் பல தக­வல்கள் வெளிப்­ப­டுத்­திக்­கொள்­ளப்­பட்­டுள்ள நிலையில் சந்­தே­கிக்­கத்­தக்க ஐவர் தொடர்­பிலும் 10 தொலை­பேசி இலக்­கங்கள் குறித்தும் விஷேட அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளன.

இது குறித்து நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாத்த பீரிஸ் முன்­னி­லையில் அறிக்கை சமர்­பித்த பம்­ப­ல­பிட்டி பொலிஸார், சந்­தே­கிக்­கத்­தக்க ஐந்து பேர் வெளி நாடு செல்­வதை தடுக்கும் வித­மாக தற்­கா­லிக தடை உத்­த­ரவைப் பெற்­றுக்­கொண்­டுள்­ளனர்.

கடந்த 21 ஆம் திகதி கடத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்ட நிலையில் மாவ­னெல்லை பகு­தியில் சட­ல­மாக மீட்­கப்­பட்ட மொஹம்மட் சகீப் சுலை­மானின் படு கொலை தொடர்பில் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில் சந்­தேக நபர்கள் என கருதி ஐவ­ருக்கு எதி­ராக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்கும் நிலையில் அவர்கள் வெளி நாட்­டுக்கு தப்பிச் செல்ல திட்­ட­மிட்­டுள்­ள­தாக பொலி­ஸா­ருக்கு கிடைத்த தகவ்­லுக்கு அமை­வா­கவே இந்த தடை உத்­த­ரவு பெறப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே, நேற்று மாலை வரை 10 சந்­தே­கிக்­கத்­தக்க தொலை­பேசி இலக்­கங்­களை மையப்­ப­டுத்­திய விசா­ர­ணை­களும் தொடர்ந்­தன.

இந்­தோ­னே­ஷியா, சீனா ஆகிய நாடு­களில் இருந்து துணி மணி­களை தனது தந்­தை­யுடன் சேர்ந்து இறக்­கு­மதி செய்யும் வர்த்­த­க­ரான மொஹம்மட் சகீப் சுலைமான் (வயது 29) கடந்த ஞாயி­றன்று வெள்­ள­வத்தை பகு­தியில் இடம்­பெற்ற திரு­மண நிகழ்­வொன்றில் பங்­கேற்­றுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் நண்­பர்­க­ளுடன் கொள்­ளுப்­பிட்­டியில் உள்ள உண­வகம் ஒன்றில் தேனீர் பானம் அருத்­தி­யுள்ளார்.

அதன் பிறகே மனை­விக்கு உணவும் எடுத்­துக்­கொண்டு அவர் அங்­கி­ருந்து வீடு நோக்கி சென்­றுள்ளார் . வீட்டின் அருகே சென்­றுள்ள அவர் வீட்டின் பிர­தான வாயிலை திறக்­கு­மாறு மனை­விக்கு தொலை­பே­சியில் தனது காருக்குள் இருந்­த­வாறே அறி­வித்­துள்ளார்.

இதன்­போது வீட்­டுக்குள் இருந்து வெளியே வந்­துள்ள மனைவி பிர­தான வாயிலை திறந்­துள்ளார். திறக்கும் போது, காரில் இருந்த தனது கண­வ­ரான கோடீஸ்­வர வர்த்­த­கரை வேனொன்றில் வந்த அடை­யாளம் தெரி­யாத நபர்கள் கடத்திக் கொண்டு செல்­வதை தான் கண்­ட­தாக மனைவி பம்­ப­ல­பிட்டி பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்கு மூலத்தில் தெரி­வித்­துள்ளார்.

இந் நிலையில் இந்த விடயம் குறித்து விசா­ர­ணைகள் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்­தி­நா­யக்க, கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் பாலித்த பணா­மல்­தெ­னிய அகி­யோரின் மேற்­பார்­வையில் பம்­ப­ல­பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் கீழான குழு­வொன்­றினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இதனை விட இது குறித்து சிறப்பு விசா­ரணை செய்யும் பொறுப்பு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் நிஸாந்த டி சொய்­ஸாவின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் சந்­தி­ர­தி­லக, மற்றும் அதன் பொறுப்­ப­தி­காரி நெவில் டி சில்வா ஆகி­யோரின் கீழான சிறப்புக் குழு­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி வர்த்­த­கரின் கைக்­க­டி­காரம் கடத்தல் இடம்­பெற்ற இடத்­தி­லி­ருந்து மீட்­கப்­பட்­டுள்­ள­துடன் அவ்­வி­டத்தில் போராடும் போது வர்த்­த­க­ருக்கு ஏற்­பட்ட காயத்­தி­லி­ருந்து சிந்­தி­யி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கத்­தக்க இரத்தக் கறை­க­ளையும் பொலிஸார் கண்­டு­பி­டித்­துள்­ளனர். இரத்தக் கறை தொடர்பில் உறு­தி­யான முடி­வுக்கு வர, கொலை செய்­யப்­பட்­டுள்ள வர்த்­தகர் சகீபின் தந்­தை­யான மொஹம்மட் ஹபீப் ஈஸாவின் இரத்த மாதிரி பெறப்­பட்டு ஆய்­வுக்­காக ஜீன் டெக் நிறு­வ­னத்­துக்கு அனுப்­பட்­டுள்­ளது.

தொடர்பில் உறுதியான முடிவுக்கு வர, கொலை செய்யப்பட்டுள்ள வர்த்தகர் சகீபின் தந்தையான மொஹம்மட் ஹபீப் ஈஸாவின் இரத்த மாதிரி பெறப்பட்டு ஆய்வுக்காக ஜீன் டெக் நிறுவனத்துக்கு அனுப்பட்டுள்ளது.

பொலிஸாரின் விசாரணைகளில் தனக்கு 4 மற்றும் 3 கோடி ரூபா மோசடி செய்த இருவர் குறித்து வர்த்­தகர் சகீப் குற்றப் புல­னாய்வு பிரி­விலும் 45 மற்றும் 35 இலட்சம் ரூபா மோசடி செய்த்வர்கள் குறித்து மோசடி தடுப்புப் பிரிவிலும் அவர் முறைப்பாடு செய்துள்ளமை தெரியவந்தது.

வர்த்­த­க­ருடன் தொலை­பே­சியில் தொடர்­பு­கொன்­ட­வர்கள் தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்ள நிலையில் பம்­ப­ல­பிட்டி பகு­தியின் பல சீ.சி.ரி.வி. கம­ராக்­களும் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவ்வாறு விசாரணைகள் தொடர்ந்த நிலையிலேயே நேற்று முன் தினம் இரவு சகீபின் சடலம் மாவனெல்லை – ஹெம்மாத்தகம பிரதான வீதியின் உக்குலேகம பள்ளத்தாக்கில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

கொலைக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்களைத் தேடிய விசாரணைகள் தொடர்கின்றன. சகீபின் சடலமானது நேற்று பிற்பகல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு ஜனாஸா நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. suliman
Mohamed-Sakeem01

SHARE