பெரும் குழப்பத்தில் அஜித் படக்குழு- என்ன தான் தீர்வு?

568

கண்ணீர்-வடித்து-அழுத-அஜித்-364x245

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடந்து வருகின்றது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் நடிக்க, அக்‌ஷரா முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகின்றார். அனிருத் இப்படத்திற்காக 3 பாடல்களை முடித்துவிட்டார்.

இப்படத்திற்கு என்ன டைட்டில் வைப்பது என்று படக்குழுவே குழப்பத்தில் இருக்கிறதாம், துருவன் பேச்சு வார்த்தையில் இருக்க, அதற்குள் விஷயம் வெளியே கசிந்தது அப்படியே அந்த டைட்டில் ட்ராப் ஆகிவிட்டது.

தற்போது வந்த தகவலின்படி ’பொய்யும் மெய்யும்’ என்ற தலைப்பு வைக்கலாம் என யோசித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

ஆனால், விஷயம் அறிந்தவர்கள் கண்டிப்பாக டைட்டில் ‘வி’யில் தான் ஆரம்பிக்கும் என கூறுகின்றனர்.

SHARE