சிறந்த கால்பந்து வீரர்மெஸ்ஸியை சமன் செய்தார் ரொனால்டோ!

274

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)

2015-2016ம் ஆண்டுக்கான ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்ச்சுக்கல் கால்பந்து அணித்தலைவரான கிரிஸ்டியானா ரொனால்டோ இவ்விருதை தட்டிச்சென்றுள்ளார்.

இறுதிச்சுற்றில் போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோ, பிரான்சின் அந்துவான் கிரீசுமன், வேல்ஸின் கேரத் பேல் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது.

இறுதியில் ரொனால்டோ 2015-2016ம் ஆண்டுக்கான ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

கிரிஸ்டியானா ரொனால்டோ இந்த விருதை ஏற்கெனவே 2013-2014ம் ஆண்டில் வென்றுள்ளதால் இது அவர் பெறும் இரண்டாவது விருதாகும்.

அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸியும் இந்த விருதை இரண்டு முறை பெற்றுள்ளது நினைவுக்கூரத்தக்கது.

2015-2016ம் ஆண்டுக்கான விருதை வென்றதன் மூலம் ரொனால்டோ, மெஸ்ஸியின் பதக்க எண்ணிக்கையை சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE