அமெரிக்காவை கலக்கி வரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

264

625.500.560.350.160.300.053.800.748.160.70 (4)

அமெரிக்கா சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் அங்குள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டு டி20 போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

இதற்கான அமெரிக்கா சென்றுள்ள இந்திய வீரர்கள், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

அதுபோல இந்திய வீரர்களான அஷ்வின், தவான் மற்றும் புவனேஷ்குமார் ஆகியார் அங்குள்ள பிரபல கூடைப்பந்து Miami Heats NBA கிளப்பிற்கு சென்று சிறிது நேரம் விளையாடினார்கள்.

View image on Twitter
 இந்திய அணியின் தலைவர் டோனி மற்றும் விராட் கோஹ்லி மைதானத்தை வலம் வந்தனர். அப்போது ரசிகர்கள் அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவதும், கோஹ்லிக்கு பரிசாக தாங்கள் வரைந்த புகைப்படங்களையும் பரிசாக அளித்தனர்.
View image on TwitterView image on TwitterView image on TwitterView image on Twitter

அதன் பின்னர் இந்திய வீரர்கள் அனைவரும் அங்குள்ள பிரபல உணவகத்தில் உணவு அருந்துவதற்கு காத்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது.

இந்திய மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் முதல் டி20 போட்டி நாளை புளோரிடாவிலும், இரண்டாவது போட்டி வரும் 28 ஆம் திகதி அதே மைதானத்திலும் நடைபெற உள்ளது.

இத்தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றினால், டி20 தரவரிசைப்பட்டியலில் இரண்டாவது இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

SHARE